இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு இன்னும் மோசமாக இருக்கும்- ஐநா எச்சரிக்கை

இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு இன்னும் மோசமாக இருக்கும்- ஐநா எச்சரிக்கை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு உலக உணவுப் பாதுகாப்பின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கும் என்று ஐநா உணவு நிவாரண பிரிவின் உலக உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டேவிட் பியஸ்லி கூறுகையில், “கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் மிகக் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படும் என்று ஏற்கெனவே எச்சரித்திருந்தேன். 

அந்த எச்சரிக்கையை ஏற்று உலக தலைவர்கள் பல்வேறு உதவிகளை அளித்தனர். நிதியுதவியும் ஊக்க திட்டங்கள், கடன் வசூல் நிறுத்திவைப்பு போன்ற சலுகைகளை அளித்தனர். அதன் பலனாக அந்த ஆண்டு வரவிருந்த மிகக் கடுமையான உணவுப் பஞ்சம் தவிர்க்கப்பட்டது.

ஆனால் தற்போது மீண்டும் கொரோனா நோய்த் தொற்று தீவிரமடைந்து வருகிறது. பல நாடுகள் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகின்றன.  கொரோனா நெருக்கடி பொருளாதாரத்தை தொடர்ந்து பாழாக்கி வருகிறது.

இந்த சூழலில் 2020ம் ஆண்டு எங்களுக்கு கிடைத்த அதே நிதியுதவு அடுத்த ஆண்டு கிடைக்காமல் போகும். அதனால் இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு உணவுப் பஞ்சம் மிக மோசமானதாக இருக்கும்.

உலக நாடுகளின் தலைவர்கள் உரிய நிதியுதவியை வழங்காவிட்டால் இந்தச் சூழலைத் தவிர்க்க முடியாது “என்று தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்