உலக அளவில் கொரோனா பாதிப்பு.. 5.48 கோடியை தாண்டியது..!

உலக அளவில் கொரோனா பாதிப்பு.. 5.48 கோடியை தாண்டியது..!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 5.48 கோடியை தாண்டியது..

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.48 கோடியாக உயர்ந்துள்ளது. 

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி  5,48,04,194 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,81,29,282 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 13,24,025 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் 1,53,50,887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 1,13,65,052 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,51,832 பேர் உயிரிழந்தனர். 69,34,613 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றால் 88,45,617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,30,109 பேர் உயிரிழந்துள்ளனர். 82,47,950 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்