கொரோனா பரிசோதனை.. 2 பாசிட்டிவ்.. 2 நெகட்டிவ்..

கொரோனா பரிசோதனை.. 2 பாசிட்டிவ்.. 2 நெகட்டிவ்.. எலன் மாஸ்க் கேள்வி..!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் கொரோனா பரிசோதனை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், கொரோனா பரிசோதனை முடிவுகள் குளறுபடிகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், ஒரே நாளில் தனக்கு மேற்கொள்ளப்பட்ட 4 கொரோனா பரிசோதனையில், இரண்டு முறை பாசிட்டிவ் என்றும், இரண்டு முறை நெகட்டிவ் என்றும் வந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் பதிவிட்டுள்ளார். ஒரே கருவி, ஒரே மாதிரி சோதனை, ஒரே செவிலியர் இருப்பினும் பரிசோதனையில் குளறுபடி இருப்பதாக அவர் கூறியுள்ளார். தற்போது வரை கொரோனா அறிகுறிகளாக தனக்கு சளி மட்டும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்