பிரசவம் பார்த்த டாக்டரின் மாஸ்க்கை அகற்றிய பச்சிளம் குழந்தை!

பிரசவம் பார்த்த டாக்டரின் மாஸ்க்கை அகற்றிய பச்சிளம் குழந்தை.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது, பிறந்த குழந்தை பிரசவம் பார்த்த மருத்துவரின் மாஸ்க்கை கழட்டிய செயல் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துபாயில் பிறந்த குழந்தை ஒன்று, பிரசவம் பார்த்த மருத்துவரின் மாஸ்க்கை கழட்டும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. துபாயைச் சேர்ந்த மகளிர் சிறப்பு மருத்துவர் சமீர் செயிப் என்பவர், பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்த நிலையில், பிறந்த குழந்தையை மருத்துவர் தூக்கியபோது அவரது மாஸ்க்கை அந்த குழந்தை அகற்றியுள்ளது. 

இந்த புகைப்படத்தை தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட மருத்துவர், "அனைவரும் முக கவசத்துக்கு விடை கொடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை" என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள், கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மாஸ்க் அணிந்துள்ள நிலையில், பிறந்த குழந்தை பிரசவம் பார்த்த மருத்துவரின் மாஸ்க்கை அகற்றியதால் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்