அமெரிக்க அதிபர் டிரம்ப் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு 3 மனைவிகள், 5 குழந்தைகள் உள்ளன. முதல் மனைவி இயாவாவை 1977ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட டெனானால்டு டிரம்ப் பின்னர் அவரை 1992ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இயாவா மூலம் ஜான் டிரம்ப், எரிக் டிரம்ப் என்ற மகன்களும், இவாங்கா டிரம்ப் என்ற மகளும் பிறந்தனர்.

1993ஆம் ஆண்டு மர்லா ஆன் மப்லஸ் என்ற பெண்ணை டிரம்ப் 2வது திருமணம் செய்துகொண்டார். மர்லா ஆன் மப்லஸ் மூலம் டிப்னி டிரம்ப் என்ற மகள் உள்ளார். 2வது மனைவியை 1999ஆம் ஆண்டு டிரம்ப் விவாகரத்து செய்தார். இதையடுத்து, மெலனியாவை 2005ஆம் ஆண்டு டிரம்ப் திருமணம் செய்தார். மெலனியா மூலம் பரோன் டிரம்ப் (14) என்ற மகன் உள்ளார். பரோன் டிரம்ப் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர். தற்போது டிரம்ப், தான் குணமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மெலனியா, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில், டொனால்டு டிரம்ப்-மெலனியாவின் மகன் பரோன் டிரம்புக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார். தற்போது மகன் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாக மெலனியா டிரம்ப் கூறியுள்ளார். 

அதே நேரத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காகவே பரோன் டிரம்புக்கு கொரோனா தொற்று பரவிய தகவலை முதலிலேயே வெளியிடவில்லை என மெலானியா டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.7%
 • இல்லை
  27.95%
 • யோசிக்கலாம்
  4.74%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.62%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்