பிரான்சில் மீண்டும் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்..!!

கொரோனா தொற்று 2வது அலை..! பிரான்சில் மீண்டும் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்..!!

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை பரவுவதால், அக்டோபர் 17 முதல் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடான பிரான்சில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகிறது.

பிரான்சில் 7.79 லட்சத்துக்கும் மேற்பட்டோர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அந்நாட்டு அதிபர் இமானுவேல் மாக்ரான் அறிவித்துள்ளார். இதன்படி, நாளை (அக்டோபர் 17) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்