வாடிக்கையாளர்களின் தரவை விற்ற பாரத்மேட்ரிமோனி மையம்!

வாடிக்கையாளர்களின் தரவை விற்ற பாரத்மேட்ரிமோனி மையம்… சைபிள் இன்க் ஷாக்கிங் ரிப்போர்ட்..!

அட்லாண்டாவை தளமாகக் கொண்ட சைபர் பாதுகாப்பு நிறுவனமான சைபிள் படி, ஆன்லைன் திருமண தகவல் வலைத்தளமான பாரத்மேட்ரிமோனி.காம் வாடிக்கையாளர்களின் தரவை டார்க்வெப் (Dark web) என்ற நிறுவனத்துக்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான சைபிள் கூறுகையில், “பெயர்கள்,தொலைபேசி எண்கள், பயனர் ஐடிகள், கணக்கு உருவாக்கும் தேதி மற்றும் நேரம் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளது. கசிந்த தரவின் மாதிரி மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 

ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு சொந்தமான 1.7 ஜிபி மதிப்புள்ள வாடிக்கையாளர் தரவு கிரிப்டோகரன்ஸியில் 500 டாலருக்கு விற்கப்பட்டுளளது. 

அதே நேரத்தில் தற்போதைய வாடிக்கையாளர்களின் தரவுகள் எதுவும் விற்கப்படவில்லை என்றும், பழைய பயனாளர்களின் தரவுகள் விற்கப்பட்டுள்ளது" என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும் சைபிள் தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்