கொரோனா 2வது முறை தொற்று வந்தால் பாதிப்பு அதிகம்!

கொரோனா நோயாளிகளுக்கு 2வது முறை தொற்று வந்தால் பாதிப்பு அதிகம்.. விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தகவல்..!

இரண்டு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க இளைஞர் குறித்து விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், இரண்டாவது முறை ஏற்படும் தொற்று மிகவும் கடுமையாக இருக்கும் என தெரியவந்துள்ளது. 

அமெரிக்க நாட்டின் நெவேடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், லான்செட் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ள ஆராய்ச்சியில், நெவேடாவில் வசிக்கும் 25 வயது இளைஞர் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த இளைஞர் இரண்டு மாதங்களுக்குள் SARS-CoV-2 வைரஸின் இரண்டு வெவ்வேறு மரபணு மாறுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. 

நெவேடா இளைஞர் முதன்முதலில் தலைவலி, இருமல், குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை அனுபவித்த பின்னர் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரது நோயை மோசமாக்கும் அடிப்படை நிலைமைகள் அவருக்கு இல்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்டு ஏப்ரல் மாத இறுதியில் குணம் அடைந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில், அந்த இளைஞருக்கு 48 நாள் இடைவெளியில் 2வது முறை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த முறை, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆக்சிஜன் செலுத்த வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமாகியுள்ளது.

இந்த ஆய்வின் மூலம், முதல் முறை கொரோனா தொற்று பாதித்தபோது கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தியால், மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன்படி, கொரோனா நோயாளிகளுக்கு 2வது முறை தொற்று வந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்