கொள்ளையர்களிடம் இருந்து தாயை காப்பாற்றிய 5 வயது சிறுவன்..!

ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்களிடம் இருந்து தாயை காப்பாற்றிய 5 வயது சிறுவன்.. ஹூரோ என பலரும் பாராட்டு..!

அமெரிக்காவைச் சேர்ந்த 5 வயது சிறுவன், தனது வீட்டில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்களிடம் இருந்து தனது தாயைப் பத்திரமாக காப்பாற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் சிறுவனை ஹீரோ என பாராட்டி வருகின்றனர்.

5 வயது சிறுவனின் நம்பமுடியாத துணிச்சலான செயல், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஆயுதத்துடன் கொள்ளையர்கள் நுழைந்ததால், சிறுவன் டேவிட் ஜான்சன் மற்றும் அவரது தாயார் தமிகா ரீட் திடுக்கிட்டனர்.

சில விநாடிகள் கழித்து, தமிகாவை துப்பாக்கியை காட்டி ஒருவர் மிரட்டும் நிலையில், மற்ற கொள்ளையர்களால் அவர் அறைக்கு வெளியே தள்ளப்படுகிறார். 

தமிகாவை அடுத்த அறைக்கு அழைத்துச் செல்லும்போது, ​​அவரது மகன் ஒரு கொள்ளையன் அணிந்திருந்த ஆடையை பிடித்து இழுத்து சண்டையிட்டுள்ளார். ஒரு கட்டத்தில், தனது தாயை துப்பாக்கி முனையில் வைத்திருந்த போதிலும், சிறுவன் அசால்டாக கொள்ளையர்களிடம் தொடர்ந்து சண்டையிட்டுள்ளார். 

இதையடுத்து, சிறுவனின் துணிச்சல் காரணமாக தனது தாயை காப்பாற்றியுள்ளார். இச்சம்பவம் செப்டம்பர் 30ஆம் தேதி நடந்துள்ளது. 

இது தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சியில் வீடியோ பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரித்த போலீசார், சிறுவனின் துணிச்சலை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். வைரலாகும் இந்த வீடியோவை பார்த்த பலரும், சிறுவனை ஒரு ஹூரோ என கூறி பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்