பிரசவ வார்டிலேயே தேர்வு எழுதிய அமெரிக்க பெண்…!

பிரசவ வார்டிலேயே தேர்வு எழுதிய அமெரிக்க பெண்…! மன உறுதிக்கு பலர் பாராட்டு..!

அமெரிக்க நாட்டில் சிகாகோவைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரசவ வார்டிலேயே தேர்வு எழுதியுள்ள சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீபத்தில் சிகாகோவை சேர்ந்த லயோலா பல்கலைகழகத்தில் இளங்கலை சட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் ஹில். இதனையடுத்து வழக்கறிஞராக அவர் பார் கவுன்சில் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். தேர்வுக்கு விண்ணப்பித்தபோது கர்ப்பமாக இருந்தார்.

கொரோனா காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 5 மற்றும் 6ஆம் தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ஆன்லைனில் 2 நாள் தேர்வு நடைபெறும்.

இத்தேர்வின் முதல் நாளில் அவருக்கு பிரசவ வலி வந்துள்ளது. அங்கிருந்து நகர்ந்தால் தேர்வு எழுத முடியாது என்பதால் தனது கணவருக்கு கால் செய்து தனது நிலைமையை கூறியுள்ளார். 

இதனை தொடர்ந்து, தனது கணவர் வரும் போது செவிலியரை உடன் அழைத்து வந்தார். செவிலியர் இவரை சோதனை செய்து கொண்டிருந்த போதும், ஹில் தொடர்ந்து தேர்வு எழுதினார். முதல் நாள் தேர்வு முடிந்ததும் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மாலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதனை தொடர்ந்து, தனது இரண்டாவது நாள் தேர்வை பிரசவ வார்டிலேயே எழுதியுள்ளார் ஹில். இவரது மன உறுதியையும், விடாமுயற்சியையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.7%
 • இல்லை
  27.95%
 • யோசிக்கலாம்
  4.74%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.62%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்