பாலியல் குற்றங்கள்.. மரண தண்டனை விதிக்க ஒப்புதல்..!

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வங்காள தேச அரசு ஒப்புதல்..!

வங்காள தேசத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 

உலகின் பல்வேறு நாடுகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து  வருகின்றன. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் மிகவும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. 

இந்த நிலையில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு வங்காள தேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

"பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்களில் விரைவாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிப்பதற்கு இந்த சட்டம் வழிவகுக்கும்" என்றும் வங்காள தேச சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் கூறியுள்ளார். 

அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்துவதற்கான அவசரச் சட்டத்துக்கு வங்காளதேச அதிபர் அப்துல் ஹமீத் ஒப்புதல் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்