கொரோனாவை மறைக்க உலக சுகாதார மையம் உதவியது:- சீனா வைராலஜி நிபுணர்


கொரோனாவை மறைக்க உலக சுகாதார மையம் உதவியது:- சீனா வைராலஜி நிபுணர்


உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்ப்படுத்திய கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியதாக , சீனா வைராலஜி நிபுணர் லீ மெங் யான் கூறியது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசை பரப்பியது சீனா தான் என்றும் இதற்கு அந்த நாடு உரிய விலை கொடுக்க வேண்டும் என அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கொரோனா ஆரம்ப கட்டத்தில் இருந்து சீனா வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதாகவும், அந்த நாடு தொடர்ந்து உலக சுகாதார அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் சீனாவிற்கு உலக சுகாதாரம் நிறுவனம் உதவுவதாகவும் இதனால் அந்த அமைப்புக்கு அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தியது.

இதனைதொடர்ந்து லீ மெங் யான், கொரோனா வைரஸ் குறித்து உலகத்திற்கு தெரிவதற்கு முன்பே சீன அரசு அதனைக் குறித்து அறிந்திருந்ததாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை மறைக்க சீன அரசாங்கத்திற்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார். சீன அரசு மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் லீ மெங் யான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்