அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல சதி..விஷம் கலந்த கடிதத்தால் வெள்ளை மாளிகையில் பரபரப்பு..

அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்ல சதி..விஷம் கலந்த கடிதத்தால் வெள்ளை மாளிகையில் பரபரப்பு..

அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்பிற்கு அனுப்பப்பட்ட விஷம் தடவிய கடிதம்  ஒன்று வெள்ளை மாளிகையைச் சென்றடையும் முன் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்படும் அஞ்சல்களைச் சோதனையிடும் நிலையத்தில் Ricin எனும் நஞ்சு கொண்ட அந்தக் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

கடிதம் குறித்து அதிபர் டிரம்ப்பின் அரசாங்கம் தகவல் எதுவும் வெளியிடவில்லை, கடிதம் எங்கிருந்து வந்தது, அதைப் போல மற்ற கடிதங்கள் அனுப்பப்பட்டனவா என்பதன் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது.

பொதுப் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது . Ricin நஞ்சைச் சுவாசித்தால் அல்லது உட்கொண்டால் வாந்தி, மயக்கம், உடலுறுப்புகளில் ரத்தக் கசிவு அல்லது செயலிழப்பு போன்றவை ஏற்படலாம்.

அமெரிக்காவில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்