அமெரிக்காவில் போலீஸ் சோதனையின் போது கொல்லப்பட்ட கறுப்பின பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 88.2 கோடி…

அமெரிக்காவில் போலீஸ் சோதனையின் போது கொல்லப்பட்ட கறுப்பின பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 88.2 கோடி…

போலீஸாரால் கொல்லப்பட்ட கறுப்பின பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 88.2 கோடி வழங்கப்படும் என்று தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக அமெரிக்காவில் கருப்பினத்தவருக்கு எதிராக பல்வேறு வன்கொடுமைகள் நடைபெற்று வருகின்றனர். இதனால் கறுப்பினத்தவர்களான ஜார்ஜ் பிலாய்ட், பிரோனா டெய்லர், அஹ்மத் ஆர்பெரி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். 

இதனை தொடர்ந்து இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. உலகளவில் தொடர்ந்து இந்த இனவெறி தாக்குதல்களுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறன. 

இதற்கிடையில் கடந்த மார்ச் 13 ம் தேதி தனது வீட்டில் நடந்த போலீஸ் சோதனையின்போது சுட்டுக் கொல்லப்பட்ட பிரோனா டெய்லரின் வழக்கின் தீர்ப்பு வெளியானது. 

அந்த தீர்ப்பின் ஒரு பகுதியாக உயிரிழந்த பிரோனா டெய்லரின் குடும்பத்திற்கு அமெரிக்காவின் லூயிஸ்வில் நகரம் ரூ.88.2 கோடி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்