தமிழகத்தில் திருடப்பட்ட ராமர், சீதா, லட்சுமணர் சிலை… 40 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

தமிழகத்தில் திருடப்பட்ட ராமர், சீதா, லட்சுமணர் சிலை… 40 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வியாபாரி ஒருவர் 40 ஆண்டுகளுக்கு முந்தைய ராமர், லட்சுமனர் மற்றும் சீதா வெண்கல சிலைகள் விற்பனைக்கு இருப்பதாக இணையதளத்தில் படங்களை வெளியிட்டார்.

இதனை பார்த்த சிலை மீட்பு பணிக்குழுவினர், தமிழக கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் என்பதை உறுதி செய்தனர். இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு இந்த தகவலை அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து அந்த படங்களில் உள்ள சிலைகள் ராமர், லட்சுமணர் மற்றும் சீதா வெண்கல சிலைகள் என்றும், மயிலாடுதுறை மாவட்டம், அனந்தமங்கலம் அனந்தமங்கலத்தில் உள்ள விஷ்ணு கோவிலில் இருந்து 1978ம் ஆண்டு திருடப்பட்டது என்பது சிலை என்றும் போலீஸார் உறுதி செய்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக கோவில்களுக்கு சொந்தமான சிலைகள் என்பதற்கான ஆதாரங்களை பிரிட்டன் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தகவலறிந்த லண்டன் வியாபாரி, ராமர் உள்ளிட்ட மூன்று சிலைகளையும், லண்டன் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்