டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க உரிமம் யாருக்கு.? டிரம்ப் அதிரடி பதில்.

டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க உரிமம் யாருக்கு.? டிரம்ப் அதிரடி பதில்.

கொரோன வைரஸ் பரவலை தொடர்ந்து பல நாடுகள் அனைத்து சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அமெரிக்கா கொரோனா பரவலுக்கு சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வந்த நிலையில்  திடீரெனெ டிக்டாக் உள்ளிட்ட சீன நிறுவங்களை சேர்ந்த பல்வேறு செயலிகளுக்கு தடை விதித்தது. மேலும், அமெரிக்கா அதிபரான டிரம்ப் டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க உரிமையை தங்கள் நாட்டை சேர்ந்த நிறுவனத்திற்கு செப்டம்பர் 20-ம் தேதிக்குள் வழங்கிட வேண்டுமென்று காலக்கெடு விதித்தார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, சிலிகான் வேலி தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள், அமெரிக்காவில் தடையைத் தவிர்ப்பதற்காக சீன நிறுவனமான டிக்டாக்கின் அமெரிக்க உரிமையாளராக மாறுவதற்கான ஒப்பந்தம் "மிக நெருக்கமாக" இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஆரக்கிள் டிக்டாக்கின் "நம்பகமான தொழில்நுட்ப வழங்குநராக" மாறும் கூட்டணிக்கு ஒப்புதல் அளிக்கலாமா என்பது குறித்து அமெரிக்க நிர்வாகம் விரைவில் ஒரு முடிவை எடுக்கப்போகிறது என்றும் அவர் கூறினார். 

டிரம்பின் இந்த அறிவிப்பு டிக்டாக்கை அமெரிக்க விற்பனைக்காக அவர் விதித்த செப்டம்பர் 20 காலக்கெடுவுக்கு முன்னதாகவே வந்துள்ளன என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

 • சரியான முடிவு
  28.04%
 • அனுபவக் குறைவு
  24.51%
 • கிரிக்கெட் அரசியல்
  35.8%
 • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
  11.64%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்