முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு 2 ஆண்டு சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கு.. இங்கிலாந்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
பிரிட்டனின் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு, இரு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சார்லி. அவருக்கு வயது 49. குழந்தைகளின் ஆயாவை 2007ஆம் ஆண்டு பலாத்காரம் செய்து தாக்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், 2016ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளராக இருக்கும் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் சார்லி மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அவர், இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த நிலையில், கணவர் சார்லி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், தனது 25 வருட திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது என அவரது மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்