பார்சல்களில் காணப்படும் கொரோனா வைரஸ் உணவில் பரவாது;- உலக சுகாதார நிறுவனம்

பார்சல்களில் காணப்படும் கொரோனா வைரஸ் உணவில் பரவாது;- உலக சுகாதார நிறுவனம்

உணவுப் பார்சல்களில் காணப்படும் கொரோனா கிருமி உணவில் பரவாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் இரண்டு நகரங்களில் இறக்குமதி செய்யப்பட்ட உறையவைக்கப்பட்ட உணவின் பொட்டலங்களில் கொரோனா கிருமி இருந்தது அடையாளம் காணப்பட்டது. அதன் காரணமாக கிருமித்தொற்று மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைப் பிரிவு தலைவர் மைக் ராயன் , உணவு மூலமாகவும் உணவு பொட்டலங்கள் மூலமாகவும் கொரோனா கிருமிப் பரவக்கூடும் என்பதற்கான சான்று எதுவும் இதுவரை இல்லை என்றும்,  சீனாவில் உள்ள ஆயிரக்கணக்கான உணவுப் பார்சல்கள் பரிசோதிக்கப்பட்டதையும் அவற்றில் வெகுசில பார்சல்களில் கிருமி இருப்பது கண்டறியப்பட்டது என்றும் நிறுவனம் குறிப்பிட்டது. மேலும் அதுகுறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்