சவூதி அரேபியா-பாகிஸ்தான் உறவு முறிவு

சவூதி அரேபியா-பாகிஸ்தான் உறவு முறிவு


காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கு கடன் மற்றும் பெட்ரோலியம் வழங்குவதை சவுதி அரேபியா நிறுத்திக் கொண்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை, சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு எடுக்கவில்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி குற்றம்சாட்டியிருந்தார். மேலும் கூட்டமைப்பு கூட்டத்தை கூட்டாவிட்டால், இஸ்லாமிய நாடுகள் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமரை கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதையும், பெட்ரோலியத்தை விநியோகிப்பதையும் சவுதி அரேபியா முடித்துக் கொண்டுள்ளது. இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த நட்புறவு முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து சவுதி அரேபியாவை சமாதானப்படுத்த அந்நாட்டுக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அடுத்த வாரத்தில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.48%
 • இல்லை
  27.83%
 • யோசிக்கலாம்
  4.97%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.73%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்