மீண்டும் எல்லையில் படைகளை குவிக்கும் சீனா..

மீண்டும் எல்லையில் படைகளை குவிக்கும் சீனா..


உத்தரகண்டில் உள்ள, இந்திய -- சீன எல்லை கட்டுப்பாட்டு பகுதியான, லிப்புலே பாஸ் அருகே, சீன ராணுவம், அதிகளவிலான படைகளை குவித்து வருவதால் இந்திய வீரர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பப்ட்ட மோதலையடுத்து, சீனாவிற்கு, ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், இந்தியா நெருக்கடிகளை அளித்து வந்தது. மேலும் இந்திய-சீனா எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதனைதொடர்ந்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சீனா வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சு வார்த்தையின் பலனாக இருநாட்டு படைகளும் சுமார் 2 கி.மீ வரை பின்வாங்கியது.

இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, லிபுலே பாஸ் அருகே, வடக்கு சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில், சீன ராணுவம், படைகளை குவித்து வருவதாக, மூத்த ராணுவ தளபதி ஒருவர் தெரிவித்தார்.அங்கு, சீன எல்லைப் பகுதியில், 1,000த்திற்கும் மேற்பட்ட, சீன ராணுவ வீரர்களின் நடமாட்டம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.மேலும் சீன ராணுவத்தின் செயலை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், இந்திய ராணுவம் எந்த சூழலையும் எதிர்கொள்ள தயராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்