கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு.. 20 ஆயிரம் பேர் போராட்டம்!

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு.. 20 ஆயிரம் பேர் போராட்டம்!

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் பிரம்மாண்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஜெர்மனியில் பாதிப்பு குறைவு தான் என்றாலும் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  

இதனால் மாஸ்க் அணிய வேண்டும் போன்ற தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

கொரோனா வைரஸ் குறைவாக இருக்கும் நிலையிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க கூடாது. மாஸ்க் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  59.3%
 • இல்லை
  33.72%
 • யோசிக்கலாம்
  3.88%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.1%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்