10 ஆண்டுகள் கடந்தாலும் கொரோனா தாக்கம் நீடிக்கும்… உலக சுகாதார அமைப்பு

10 ஆண்டுகள் கடந்தாலும் கொரோனா தாக்கம் நீடிக்கும்… உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் உலக நாடுகளில் ஏற்படுத்திய தாக்கம் 10 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கும் என உலக சுகாதார தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசெஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “உலக நாடுகள் நூற்றாண்டுக்கு ஒரு முறை வரலாறு காணாத சுகாதார பிரச்சனைகளை சந்திக்கின்றன. அந்தவகையில் கடந்த 1918 ம் ஆண்டு ஸ்பானிஷ் ப்ளூ பல கோடி மக்களை தாக்கி மாய்த்தது. கொரோனா வைரஸ் 1.80 கோடிக்கும் அதிகமானவர்களை பாதித்துள்ளது. அதில் உயிரிழப்பு 6.80 லட்சத்தை தாண்டியுள்ளது.

மேலும் உலக நாடுகளின் பொருளாதாரமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்த தாக்கம் 10 ஆண்டுகளை கடந், நீடிக்கும். உலக சுகாதார அமைப்பு, கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி கொரோனா நோய் தொற்று குறித்து உலக நாடுகளுக்கு பொது சுகாதார அவசர எச்சரிக்கை விடுத்தது.  அப்போது சீனாவில் மட்டும் தான் கொரோனா பரவியிருந்தது. அதன்பின், வேகமாமும், பாதிப்பும்  எண்ணிப்பார்க்க முடியாத அளவில் உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்