கல்விக்கு வயது ஒரு தடையில் என்பதை நிரூபித்த 96 வயது முதியவர்…

கல்விக்கு வயது ஒரு தடையில் என்பதை நிரூபித்த 96 வயது முதியவர்…

இத்தாலியில் 96 வயதான முதியவர் ஒருவர் பல்கலைகழக படிப்பை முடித்து பட்டம் வென்றது பலரையும் நெகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இத்தாலியில் 96 வயதான கியூசெப் பட்டர்னோ என்பவர் சிறுவயது முதலே வறுமை, போர் என வாழ்க்கையில் பல சோதனைகளை எதிர்கொண்டார்.இவர் தற்போது இத்தாலியில் முதுமையான வயதில் பல்கலைக்கழகம் பட்டம் பெற்ற நபராக திகழ்கிறார்.

கியூசெப் பட்டர்னோ தனது குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்தி, இரண்டாம் உலகப்போரின் போது கடற்படையில் பணியில் சேர்ந்துள்ளார். இதன்பிறகு ரயில்வே ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ஓய்வுக்கு பிறகும் அவருக்கு கற்றலில் ஆர்வம் குறையவில்லை. இதனையடுத்து அவர் இத்தாலியில் தனது கல்லூரி படிப்பை கடந்த 2017ம் ஆண்டு தொடங்கினார். அவருடன் படித்தவர்கள் அனைவரும் அவரை விட எழுபது ஆண்டுகள் குறைவான வயது உடையவர்கள். இவர் தனது 90வது வயதிலேயே கல்லூரி படிக்க முடிவெடுத்துள்ளார். ஆனால் படிப்பை தொடர முடியவில்லை. ஆனால் விடமுயற்சியுடன் 2017ம் ஆண்டு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து தற்போது தனது பட்டத்தை பெற்றுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ”எனது மனதில் இதை செய்து முடிக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தது.  அறிவு என்பது நாம் தினமும் எடுத்து செல்லும் சூட்கேஸ் போன்றது. அது ஒரு புதையல்.” என்று கூறினார்.

இதனைதொடர்ந்து அவர் என்ன செய்யவுள்ளீர்கள் என்ற கேள்விக்கு, புத்தகங்கள் எழுத வேண்டும் என ஆசைப்படுவதாகவும்,  இதேபோல் நூல்களைப் படித்து ஆராய்ச்சி செய்யவும் திட்டம் வைத்துள்ளதாகவும் கூறினார்.

பல தடைகளையும் கடந்து பட்டம் வென்று இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் கியூசெப் பட்டர்னோவை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்