வடிவேலு பாணியில் சும்மாவே இருந்து பிரபலமான இளைஞர்...


வடிவேலு பாணியில் சும்மாவே இருந்து பிரபலமான  இளைஞர்...இந்தோனேசிய நபர் ஒருவர் 2 மணி நேரமாக சும்மாவே இருக்கும் வீடியோ ஒன்று யூடியூபில் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வருகிறது.

இந்தோனேசியவை சேர்ந்த முகமது திடிட் என்பவர், கேமரா முன் அமர்ந்து அதனை வெறித்து பார்த்துக் கொண்டு 2 மணி நேரம் சும்மாவே இருந்து பொழுதைக் கழித்துள்ளார். இதில் ஒரு ஆச்சரியான சம்பவம் என்னவென்றால், அந்த வீடியோவை 1.9 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர்.  மேலும் விதவிதமான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. இதற்கு மேல் ஒருபடி மேலே சென்ற சிலர்; அவர் எப்படி இத்தனை மணி நேரம் எதுவும் செய்யாமல் கேமராவை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றும், அவரது மனதில் என்ன எண்ணங்கள் தோன்றியிருக்கும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு சிலர் அவர் எத்தனை முறை கண்களை சிமிட்டினார் என்று நகைச்சுவையுடன் கூறி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்