கொரோனா அச்சம்… தென்கொரியாவில் பணத்தை வாஷிங் மெஷினில் போட்டு கழுவிய நபர்…

கொரோனா அச்சம்… தென்கொரியாவில் பணத்தை வாஷிங் மெஷினில் போட்டு கழுவிய நபர்…

தென்கொரியாவில் ஒருவர் கொரோனா அச்சம் காரணமாக வாஷிங் மெஷினில் போட்டு சுத்தம் செய்ய முயன்று சிக்கலில் மாட்டியுள்ளார்.

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தென்கொரியாவில் சில மாதங்களுக்கு முன்னர் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் தென்கொரிய தலைநகர் சியோல் அருகே உள்ள ஆன்சாப் நகரில் வசித்து வந்த ஒருவர் தன்னிடம் இருந்த 50,000 வோன் நோட்டுக்கட்டை வாஷிங் மெஷினில் போட்டு சுத்தம் செய்துள்ளார். 

பின்னர் அதனை ஹீட்டரில் போட்டு அதில் உள்ள கிருமிகளை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஹீட்டரில் வெப்பம் அதிகமான காரணத்தால் சில வோன் நோட்டுகள் பலத்த சேதம் அடைந்தன. இதனால் பதறிய அவர் ஹீட்டரில் இருந்து பணத்தை வெளியே எடுத்துள்ளார். இதில் நோட்டுகள் பலத்த சேதமடைந்தது.

இதனால் வங்கியை அணுகி அவர் நடந்ததை தெரிவித்தார். இதனை தொடர்ந்து மோசமாக பாதிக்கப்பட்டு, கிழிந்த, எரிந்த நிலையில் இருந்த வோன் நோட்டுகளை மட்டும் மாற்றிக் கொடுத்துள்ளனர்.  

ஒரு 50 ஆயிரம் வோன் மதிப்பு 42 லட்ச டாலருக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்