2024 ஆம் ஆண்டில் தான் சர்வதேச விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: விமானப் போக்குவரத்து சங்கம் கணிப்பு..!

2024 ஆம் ஆண்டில் தான் சர்வதேச விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: விமானப் போக்குவரத்து சங்கம் கணிப்பு..!
 

கனடாவில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம், உலக அளவில் விமானப் போக்குவரத்தானது 2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவித்துள்ளது.

கொரோனா  தடுப்பு நடவடிக்கை காரணமாக பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலக நாடுகளுக்கு இடையே நோய் தொற்று பரவும் அபாயத்தைத் தடுக்கும் வகையில் சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

தற்போது இந்தியாவைப் பொறுத்தவரையில் கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமானப் போக்குவரத்து குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனடாவில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம், உலக அளவில் விமானப் போக்குவரத்தானது 2024 ஆம் ஆண்டில் தான் இயல்பு நிலைக்குத் திரும்பும் எனத் தெரிவித்துள்ளது.

தற்போதைய கணிப்பின்படி கொரோனா ஊரடங்கால் 2020ஆம் ஆண்டில் 55 சதவிகிதத்திலான விமானப் போக்குவரத்து சேவை பாதிப்படையும் என இந்த அமைப்பு கணித்துள்ளது.  மேலும் ஏப்ரல் மாதக் கணிப்பில் 46% மட்டுமே நடப்பாண்டு விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்