அமெரிக்காவில் களைகட்டும் அயோத்தி:-தயாராகிறது டைம்ஸ் சதுக்கம்


அமெரிக்காவில் களைகட்டும் அயோத்தி:-தயாராகிறது டைம்ஸ் சதுக்கம்


அயோத்தியில்  ராமர் கோயில்அடிக்கல் நாட்டு விழாவை அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில்   ஒளிபரப்ப  தயாராகி வருவதாக  தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் நடக்கப்போகும் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை கொண்டாடுவதற்காக நியூயார்க்கில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக  அமெரிக்க இந்திய பொது விவகாரக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் செஹானி தெரிவித்துள்ளார்.

இதனைதொடர்ந்து பேசிய மற்றோரு அமெரிக்க வாழ் இந்தியர்“பிரதமர் மோடியின் கீழ், ராமர் கோயில் கட்டப்படுவது என்பது உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கு ஒரு கனவு நனவாவது போன்றதாகும். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்த நாள் விரைவில் வரும் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் மோடியின் தலைமை காரணமாக, இந்த நாள் வந்துவிட்டது. அதை ஒரு பொருத்தமான முறையில் கொண்டாட விரும்புகிறோம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ராமரின் உருவப் படங்கள் டைம்ஸ் சதுக்கத்தை ராம பக்தியில் மூழ்கடிக்கும்” என தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்