உலகம்
தண்டனையில் இருந்து தப்பிக்க போலி இறப்பு சான்றிதழ்:- எழுத்து பிழையால் சிக்கிய பரிதாபம்
தண்டனையில் இருந்து தப்பிக்க போலி இறப்பு சான்றிதழ்:- எழுத்து பிழையால் சிக்கிய பரிதாபம்
அமெரிக்காவில் போலி மரண சான்றிதழ் மூலம் தண்டனையில் இருந்து தப்ப நினைத்த குற்றவாளி ஒருவர், எழுத்துப்பிழையினால் சிக்கிக் கொண்டுள்ள சமபவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவில் போலி மரண சான்றிதழ் மூலம் தண்டனையில் இருந்து தப்ப நினைத்த குற்றவாளி ஒருவர், எழுத்துப்பிழையினால் சிக்கிக் கொண்டுள்ள சமபவம் அரங்கேறியுள்ளது.
லாங் தீவைச் சேர்ந்த ஒரு குற்றவாளி சிறை தண்டனையை தவிர்க்க, நீதிமன்றத்திற்கு போலியானஇறப்பு சான்றிதழை அவருடன் வழக்கறிஞர் அனுப்பியுள்ளார். ஆனால் சமர்ப்பிக்கப்பட்ட இறப்புச் சான்றிதழில் எழுத்துப் பிழை இருந்ததால் அவர் கையும் களவுமாக பிடிபட்டார்.
இதனையடுத்து நியூயார்க்கின் ஹண்டிங்டனில் பகுதியை ராபர்ட் பெர்கர், தண்டனையைத் தவிர்ப்பதற்காக போலி மரண சான்றிதழ் தயாரித்த குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால், கூடுதலாக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.