என் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப நான் தயார்; - டிரம்ப்

என் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப நான் தயார்; - டிரம்ப்

அமெரிக்காவில் பள்ளிகளை திறக்கும் முடிவில் உறுதியாக இருக்கும் அதிபர் டிரம்ப், தன் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பள்ளிகளை திறக்கும் முடிவில் உறுதியாக இருக்கும் அதிபர் டிரம்ப், தன் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா  தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டாலும் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்காவில் உள்ள மகாணங்கள்  திணறி வருகிறது.
இருந்த போதிலும் அமெரிக்கா பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தொழிற்சாலைகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது.  இதனையடுத்து பள்ளிகளை மீண்டும் திறக்கஅதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்பிடம், உங்கள் வீட்டுக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாராக இருக்கிறீர்களா..? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், தான் பள்ளிகள் திறந்திருப்பதையே விரும்புவதாகவும், தன் வீட்டுப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத்  நான்  தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com