இந்தியாவில் வெள்ளத்திற்கு பலியானவர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்

இந்தியாவில் வெள்ளத்திற்கு பலியானவர்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல்

வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
அசாம், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை, வெள்ளத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அசாமில் கோரத்தாண்டவம் ஆடும் வெள்ளத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு மிகவும் திண்டாடி வருகிறது.  இதுவரை அசாமில் ஏற்பட்ட பேரழிவால் வெள்ளத்தில் சிக்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்கள் முழுவதும் 24 மாவட்டங்களை சேர்ந்த 26 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது அசாமில் 2 ஆயிரத்து 525 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு தூதரகம் வாயிலாக தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் வட மாநிலங்களில் கனமழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com