சீனாவில் பரவும் பிளேக் நோய்... மக்கள் ஷாக்!

சீனாவில் பரவும் பிளேக் நோய்... மக்கள் ஷாக்!
சீனாவில் பிளேக் நோய் தாக்கம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 
கொரோனா வைரசின் முதல் அலையில் இருந்து மீண்ட சீனா, தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இந்நோயில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் சீனாவில் தலைகாட்டத் தொடங்கியுள்ளது.
சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோய்க்கு ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பது 2 நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
பிளேக் நோய் தாக்கம் எதிரொலியாக, பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த உஷார் நிலை இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரசை தொடர்ந்து சீனாவில் பிளேக் நோய் கண்டறியப்பட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்