பார்வையாளர்கள் கண்முன் பெண் காப்பாளரை சூறையாடிய புலி..!

பார்வையாளர்கள் கண்முன் பெண் காப்பாளரை சூறையாடிய புலி..!

சுவிட்சர்லாந்தின் சூரிச் வனவிலங்கு பூங்காவில் பார்வையாளர்கள் கண் முன்னே பெண் காப்பாளரை புலி ஒன்று காயப்படுத்தி கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

வனவிலங்கு பூங்கா ஊழியர்கள் அந்த 55 வயது பெண் காப்பாளரை காப்பாற்ற மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணானதாக சூரிச் காவல்துறை நடத்திய  முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தால் திகிலடைந்த பார்வையாளர்கள் துரிதமாக செயல்பட்டு, எச்சரிக்கை மணியை அழுத்தியுள்ளனர். இதனையடுத்து வனவிலங்கு பூங்கா ஊழியர்கள் பலர் உடனடியாக செயல்பட்டு, புலியை சாந்தப்படுத்தி அப்புறப்படுத்தினர். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த 55 வயது காப்பாளர் காயங்களால் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்