ட்விட்டர் பயனர்களின் பல நாள் கோரிக்கையான எடிட் ஆப்ஷனுக்கு, அந்நிறுவனம், ‛அனைவரும் மார்க் அணிந்தால் எடிட் செய்யும் வசதியை பெறலாம்,' என தெரிவித்துள்ளது.
ட்விட்டர் பயனர்களின் பல நாள் கோரிக்கையான எடிட் ஆப்ஷனுக்கு, அந்நிறுவனம், ‛அனைவரும் மார்க் அணிந்தால் எடிட் செய்யும் வசதியை பெறலாம்,' என தெரிவித்துள்ளது.
சமூக வலைதளமான ட்விட்டரில் எடிட் ஆப்ஷன் இல்லை. இதனால் தவறு ஏதும் இருந்தால் அதனை சரி செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனால் பலரும் ட்விட்டர் நிறுவனத்திடன் எடிட் ஆப்ஷன் வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பயனாளர்களால் பலமுறை கோரிக்கை விடுத்தும் எடிட் ஆப்ஷனை கொடுக்காமல் ட்விட்டர் நிர்வாகம் சமாளித்து வந்தது. எடிட் ஆப்ஷன் கொடுக்கப்பட்டால் பதிவுகளின் உண்மைத்தன்மை போய்விடும் என்ற கருத்தையும் ட்விட்டர் கூறி வருகிறது.
இந்நிலையில் இன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம், ‛அனைவரும் மாஸ்க் அணிந்துவிட்டால் நீங்கள் எடிட் செய்யும் வசதியைப் பெறலாம்,' எனப் பதிவிட்டுள்ளது.
இதற்கு, மாஸ் அணிய என்னதான் விழிப்புணர்வு கொடுத்தாலும் அது நடக்காத ஒன்று, அதே போல் ட்விட்டரில் எடிட் ஆப்ஷன் கொடுப்பதும் நடக்காத ஒன்று என கமெண்ட் செய்து வருகின்றனர்.