தைவானில் மீண்டும் பயணம் செய்யத் துடிக்கும் பயணிகளுக்கு விமானத்தில் பறக்கும் அனுபவத்தைக் கொடுக்க சாங்ஷான் விமான நிலையம் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது.
தைவானில் மீண்டும் பயணம் செய்யத் துடிக்கும் பயணிகளுக்கு விமானத்தில் பறக்கும் அனுபவத்தைக் கொடுக்க சாங்ஷான் விமான நிலையம் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது.
தைவானின் தைபேயில் உள்ள சாங்ஷான் விமான நிலையம் கடந்த வியாழக்கிழமை 'எங்கும் செல்லா விமானம்' அறிமுகம் செய்யப்பட்டது. அதில் அங்குள்ள பயணிகள் ஒரு போலி பயணத்திட்டத்தை மூலம் விமான நிலைத்தில் செக்-இன் செய்கிறார்கள், பாஸ்போர்ட் கட்டுப்பாடு, பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பிறகு அவர்கள் விமானத்தில் ஏறலாம்.ஆனால் அவர்கள் எங்கும் பயணம் செய்யமுடியாது.
இது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பயணிகள் இல்லாத நிலையில் புதுப்பிக்கப்பட்ட பணிகளைக் காட்ட விமான நிலையம் இந்த நிகழ்வைப் பயன்படுத்துகிறது. சுமார் 60 பேர் முதல் 'எங்கும் செல்லா விமானம்' ஏறினர்.
இந்த அனுபவத்திற்காக 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்தனர். அதில் குலுக்கல் முறையில் 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வரும் வாரங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.