கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய வைரஸ்: மனிதர்களை தாக்கும் அபாயம்!

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் பரவும் புதிய வைரஸ்: மனிதர்களை தாக்கும் அபாயம்!


சீனாவில் கொரோனா போல இன்னொரு புதுவிதமான காய்ச்சல் பரவி வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காய்ச்சலானது பன்றிகளிடையே வேகமாக பரவி வரும் நிலையில் எந்த நேரத்திலும் இது மனிதர்களைத் தாக்கலாம் என்ற ஆபத்து இருந்து வருகிறது. இக்காய்ச்சல் கொரோனா வைரஸ் தொற்று போல உலகப் பெருந்தொற்றாக மாறி ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக்கூடும் அச்சுறுத்தல் கொண்டுள்ளது என ஆய்வாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

மேலும் இது புதுவிதமான வைரஸ் என்பதால் மனிதர்களுக்கு இதனை எதிர்கொள்ள நோயெதிர்ப்புத் திறன் இருக்காது. இப்போது வரை இதனால் பேராபத்து ஏதும் இல்லை. ஆனால், இதனை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்கிறார் இது குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் கிம் செள சாங். இந்த வைரஸை G4 EA H1N1 என ஆராய்ச்சியாளர்கள் அழைக்கிறார்கள்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கால்நடை மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் ஜேம்ஸ் வூட் கூறுகையில், நோய்க்கிருமிகளின் புதிய தோற்றத்தினால் நாம் தொடர்ந்து ஆபத்தில் உள்ளோம். மேலும் நாம் வளர்க்கும் விலங்குகள், மனிதர்களுடன் அதிக தொடர்பு கொண்டவையாக உள்ளன. இது வனவிலங்குகளை விட தொற்று வைரஸ்களுக்கான முக்கிய ஆதாரமாக செயல்படலாம் என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்