கொரோனா அறிகுறிகளின் பட்டியலில் மூன்று புதிய அறிகுறிகள்..?

கொரோனா அறிகுறிகளின் பட்டியலில் மூன்று புதிய அறிகுறிகள்..?


கொரோனா அறிகுறிகளின் பட்டியலில் தற்போது மூன்று புதிய அறிகுறிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கொரோனா அறிகுறிகளாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் முதலில் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டன. அதன்பின் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா அறிகுறிகளாக  குளிர், தசை வலி, தலைவலி, தொண்டை புண், வாசனை நுகர்வு தன்மையில்லாமை உள்ளிட்டவற்றையும் பட்டியலில் இணைத்தனர்.

அதன் பின்னர் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் அதுவும் கொரோனா அறிகுறி எனக் கூறினர். அந்த வகையில் தற்போது கொரோனா அறிகுறிகளாக புதிய மூன்று அறிகுறிகளை நோய் கட்டுப்பாட்டு மையங்கள் அறிவித்துள்ளன.

 அதன்படி மூக்கு ஒழுகுதல், குமட்டல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை இருந்தாலும் அதுவும் கொரோனாவுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர். 2- 14 நாட்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அது கொரோனாவுக்கான அற்குறிகளாக இருக்கலாம் என எச்சரித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்