நியூசிலாந்தில் வாகன சோதனையின் போது போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற நபர்

நியூசிலாந்தில் வாகன சோதனையின் போது போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்ற நபர்

நியூசிலாந்தில் வாகனச் சோதனையின் போது போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்

நியூசிலாந்தில் வாகனச் சோதனையின் போது போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆக்லாந்த் புறநகரில் ஒரு காரை நிறுத்தியபோது அதில் இருந்த நபர் போலீசார் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்த நிலையில், மற்றொரு போலீஸ் அதிகாரி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் காரில் அதிவேகமாக தப்பிச் சென்றபோது பொதுமக்கள் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் பராமரிப்பு நிலையங்கள் மூடி மர்மநபரை தேடி வருவதாகவும் இந்த தாக்குதலால் பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை என்று போலீஸ் கமிஷனர் ஆண்ட்ரூ கோஸ்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com