சிங்கப்பூரில் சில்லறை விற்பனைக் கடைகள் உணவகங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன.
சிங்கப்பூரில் சில்லறை விற்பனைக் கடைகள் உணவகங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன. பூங்காக்கள், கடற்கரைகளுக்கும் மக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகை உலுக்கு கொரோனா பல்வேறு நாடுகளில் தனது ருத்ர தாண்டவத்தை ஆடி வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளில் இதன் தாக்கம் கட்டுப்பாடுப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் கொரோனா கட்டுப்பாட்டில் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு பட்டுவருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூரில் சில்லறை விற்பனைக் கடைகள் உணவகங்கள் இன்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன. பூங்காக்கள், கடற்கரைகளுக்கும் மக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வருவோருக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து சிங்கப்பூர் திரும்புவோர் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக அவர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்றும் மற்ற நாடுகளில் இருந்து வருவோர் அரசின் தனிமை முகாம்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல் ஆகியவை கொரோனா கிருமித்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் என்று மக்களுக்கு சிங்கபூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.