உலகம்
விண்வெளி, ஆழ்கடல்… இரண்டையும் கண்ட சிங்கப்பெண்…
விண்வெளி, ஆழ்கடல்… இரண்டையும் கண்ட சிங்கப்பெண்…
அமெரிக்க புவியியலாளரான கேத்தி சல்லிவன் தன்னுடைய 68 வயதில் பூமியின் மிக ஆழமான பகுதியான சேலஞ்சர் டீப்பை அடைந்து அசத்தியுள்ளார்.
அமெரிக்க புவியியலாளரான கேத்தி சல்லிவன் தன்னுடைய 68 வயதில் பூமியின் மிக ஆழமான பகுதியான சேலஞ்சர் டீப்பை அடைந்து அசத்தியுள்ளார்.
1951-ல் பிறந்த கேத்தி சல்லிவன் அக்டோபர் 11, 1984-ம் ஆண்டு விண்வெளியில் தனது கால்தடம் பதித்தார். இதன்மூலம் விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்க பெண்மணி என்ற புகழை பெற்றார்.
அதனை தொடர்ந்து தற்போது தெற்கு பசுபிக் கடலிலுள்ள மரியானா டிரன்ச்-ன் (mariana trench) மிக ஆழமான பகுதியான சேலஞ்சர் டீப்பை கடந்து அசத்தியுள்ளார்.
சேலஞ்சர் டீப்பை அடைய கேத்தி கடலில் பிரத்யக ஊர்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூமியின் ஆழமான பகுதியான சேலஞ்சர் டீப் பகுதியை அடைந்த எட்டாவது நபர் கேத்தி. இதன்மூலம் விண்வெளி மற்றும் ஆழ்கடல் என இரண்டையும் கண்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "விண்வெளிக்குச் செல்லும்போது சந்தித்த சவால்களை விட கடலுக்குள் அதிகமான சவால்களைக் சந்தித்ததாகவும், விண்வெளியில் உள்ள அழுத்தத்தை விட கடலின் அடி ஆழத்தில் உள்ள அழுத்தமானது பல மடங்கு அதிகம்" என்றும் தெரிவித்தார்.
தனது சாதனை பயணத்தை கேத்தி சல்லிவன் ஜூன் 15-ம் தேதி குவாம் தீவிலுள்ள துறைமுகத்துக்கு திரும்புவாரென எதிர்பார்க்கப்படுகிறது.