ஆசியாவிலேயே மிக விலை உயர்ந்த விவாகரத்து..ஒரே கையெழுத்தில் அதிபதியான பெண்..

ஆசியாவிலேயே மிக விலை உயர்ந்த விவாகரத்து..ஒரே கையெழுத்தில் அதிபதியான பெண்..


ஆசியாவில் இதுவரை நடந்த மிக விலை உயர்ந்த விவாகரத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது சீன தம்பதியின் விவாகரத்து. இந்த விவகாரத்தால், உலகிலேயே மிகப் பணக்கார கோடீஸ்வரிகளில் ஒருவராக இடம்பெற்றுள்ளார் சீனப் பெண்மணி.

சீனாவின்  காங்டாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் தலைவர் டு வீமின்.இவரது மனைவி யுவான் இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது டு வீமின் தனது தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் 161.3 மில்லியன் பங்குகளை தனது முன்னாள் மனைவி யுவானுக்கு  மாற்றியிருக்கிறார்.

இதன் மதிப்பு 320 கோடி அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் சுமார். ரூ.24 ஆயிரம் கோடி)  இருக்கும் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மே 29 அன்று தாக்கல் செய்யப்பட்ட தகவலின்படி, யுவான் உலகின் பணக்காரர்களின் வரிசையில் சேர்ந்து உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.02%
  • தவறான முடிவு
    20.84%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.91%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.23%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்