விண்வெளி ஆய்வு மையத்தில் கால் பதித்த நாசா விண்வெளி வீரர்கள்…

விண்வெளி ஆய்வு மையத்தில் கால் பதித்த நாசா விண்வெளி வீரர்கள்…

அமெரிக்காவின், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவன ராக்கெட்டில் சென்ற, இரண்டு, 'நாசா' விண்வெளி வீரர்களும், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த 'ஸ்பேஸ்எக்ஸ்' என்ற தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் க்ரூ டிராகன்' விண்கலத்தை ஏந்திச் செல்லும், 'பால்கன் 9' ரக ராக்கெட்டை தயாரித்திருந்தது. நாசாவை சேர்ந்த டக்ளஸ் ஹர்லி மற்றும் ராபர்ட் பெஹன்கென் ஆகிய வீரர்கள் தேர்வாகினர். நள்ளிரவு 12:52 மணிக்கு கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம், 19 மணி நேர பயணத்திற்குப் பின், நேற்று முன்தினம் இரவு, விண்வெளியில் நிலைகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டது. 

இதையடுத்து, வீரர்கள் இருவரும், சர்வதேச விண்வெளி மையத்திற்குள் நுழைந்துள்ளனர். 

அவர்களை, அங்குள்ள நாசா விண்வெளி வீரர் கிரிஸ் கேசிடி உட்பட, 63வது விண்வெளி ஆய்வு குழுவை சேர்ந்தவர்கள் வரவேற்றனர். இதை, நாசா நேற்று உறுதிபடுத்தியுள்ளது.சர்வதேச விண்வெளி மையத்திற்குள், வீரர்கள் நுழையும், 'வீடியோ'வை, நாசா 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ளது. 

அத்துடன், நாசா, ‘வரலாற்றில் முதன் முறையாக, தனியார் ராக்கெட் மூலம், விண்ணிற்கு சென்ற நாசா விண்வெளி வீரர்கள், பாப் பென்கெனும், டக் ஹர்லியும், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குள் நுழைந்து உள்ளனர்.’ என்று  குறிப்பிடப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்