போலீஸ் அதிகாரி மீது கொலை வழக்குப் பதிவு

கருப்பினர் இளைஞர் கொலை: போலீஸ் அதிகாரி மீது கொலை வழக்குப் பதிவு
கடந்த வாரம் திங்கட் கிழமை மின்னியாபோலிஸ் நகரில் போலீஸ் அதிகாரி டெரெக் சவின் முட்டிக்கு கீழ் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிலாய்ட் சிக்கி கெஞ்சும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததையடுத்து டெரேக் உள்பட 4 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமெரிக்கா முழுவதும் பெருநகரப் பகுதிகளுக்கும் அமைதியான ஆர்ப்பாட்டங்கள்  விரைந்து பரவியது. சில ஆர்ப்பாட்டக்காரர்களும், சட்ட அமலாக்க அதிகாரிகளும் மோதிக்கொண்டனர். கட்டிடங்கள் எரிக்கப்பட்டன மற்றும் வணிகங்கள் சூறையாடப்பட்டன. பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க நகரங்களில் வார இறுதியில் சுமார் 4,100 பேரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபிலாய்ட் இறந்து ஏறக்குறைய ஒரு வாரத்திற்குப் பிறகு, நாடு தழுவிய பதட்டங்கள் அமைதியானதா அல்லது அதிகரிக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை.
இதனிடையே, கைது செய்யப்பட்ட டெரேக் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்