கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது..முதலில் கட்டுப்படுத்த நினைக்கலாம், பின்னர்..? இந்தோனேசிய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது..முதலில் கட்டுப்படுத்த நினைக்கலாம், பின்னர்..? இந்தோனேசிய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது. அதனை ஆரம்பத்தில் நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கலாம், பின்னர் அது முடியாது என்பதை கற்றுக்கொள்வீர்கள் என்று கூறிய இந்தோனேசிய அம

கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது. அதனை ஆரம்பத்தில் நீங்கள் கட்டுப்படுத்த நினைக்கலாம், பின்னர் அது முடியாது என்பதை கற்றுக்கொள்வீர்கள் என்று கூறிய இந்தோனேசிய அமைச்சருக்கு மகளிர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் முகமது மஹ்புத் இந்த வார தொடக்கத்தில் உள்ளூர் பல்கலைக்கழகத்திற்கு ஆன்லைன் மூலம் ஆற்றிய உரையாற்றினார். அதில், “நாம் எப்போதும் ஒளிந்துகொண்டிருக்க முடியுமா? நம் உடல்நலத்தில் கவனம் செலுத்தினால் நிலைமையை  சரிசெய்ய முடியும். கொரோனா வைரஸ் உங்கள் மனைவி போன்றது. ஆரம்பத்தில் நீங்கள் கட்டுப்படுத்த நினைப்பீர்கள், ஆனால் உங்களால் முடியாது. பின்னர் நீங்கள் அதனுடன் வாழ கற்றுக்கொள்வீர்கள்.” என் தனக்கு வந்த மீம்ஸை மேற்கோள் காட்டி நகைச்சுவையாக பேசினார்.
 இந்நிலையில் இதற்கு மகளிர் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் மகளிர் ஒற்றுமை குழுவின் தலைமை நிர்வாகி டிண்டா நிசா யூரா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நாட்டில் பொது அதிகாரிகளின் பாலியல் மற்றும் தவறான மனநிலையை இது காட்டுகிறது', என குறிப்பிட்டுள்ளார்.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com