சாலைகளில் விழுந்து துடிதுடித்து இறக்கும் கொரோனா நோயாளிகள்

சாலைகளில் விழுந்து துடிதுடித்து இறக்கும் கொரோனா நோயாளிகள்

ஈரானில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்கடங்காமல் இருப்பதால், வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் விழுந்து மரணிக்கும் அவலம் நிகழ்ந்து வருகிறது.

ஈரானில் கொரோனாவின் தாக்கம் கட்டுக்கடங்காமல் இருப்பதால், வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் விழுந்து மரணிக்கும் அவலம் நிகழ்ந்து வருகிறது.
ஈரானில் பெருந்தொற்றினால் இதுவரை ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும், 7 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்த நிலையில் தலைநகர் டெஹரானில் சாலையில் கடுமையான மூச்சிறைப்போடு இளைஞர் ஒருவர் உயிருக்குப் போராடும் வீடியோ வெளியாகி உள்ளது.
இதேபோல் வணிக வளாகம், நகரும் படிக்கட்டு, காருக்கு அடியிலும்... என ஆங்காங்கே கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விழுந்து இறந்து கிடக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. 
ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் கொரோனா தொற்று என்பதை மக்களும், அரசும் அறியும் முன்னரே இதுபோன்ற இறப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
இதனிடையே கொரோனாவால் மரணித்தவர்களை அடக்கம் செய்ய ஆயிரக்கணக்கான குழிகளை ஈரான் அரசு தோண்டி வைத்துள்ள வீடியோவும் வெளியாகி உள்ளது
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com