ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த அதிபர் டிரம்ப்..நிராகரித்த ஜெர்மன் பிரதமர்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த அதிபர் டிரம்ப்..நிராகரித்த ஜெர்மன் பிரதமர்

அமெரிக்காவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அதிபர் டிரம்ப் விடுத்த அழைப்பை ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகிய

அமெரிக்காவில் நடைபெறும்  ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அதிபர் டிரம்ப் விடுத்த அழைப்பை  ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அமெரிக்காவில் ஜி7 உச்சி மாநாட்டை நடத்துவதை விட சிறந்த முன்னுதாரணம் இருக்க முடியாது என டிரம்ப் கருதுவதாக வெள்ளைமாளிகை  தெரிவித்திருக்கிறது. அதன்படி வாஷிங்டனில் ஜூன் மாத இறுதியில் ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்குமாறு அதிபர் டிரம்ப் விடுத்த அழைப்பை  ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நன்றிதெரிவித்ததாக அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளார் கூறியுள்ளார். எனினும் தற்போதைய கொரோனா பேரிடர் நிலவரத்தை கருத்தில் கொண்டு  நிராகரித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com