மதம் மாறியதாக இளம் பெண்ணை சரமாரியாகத் தாக்கிய தந்தை...
கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாகக் கூறப்படும் 24 வயது இளம்பெண், தனது தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உகாண்டாவில் 24 வயது இளம்பெண் ரஹேமா கியோமுஹெண்டோ என்பவர், தனது முஸ்லிம் தந்தையால் தாக்கப்பட்டதில் மே 4ஆம் தேதி காயம் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இளம்பெண், அவரது தந்தையுடன் அத்தை வீட்டுக்கு தங்கச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், அத்தை இயேசு கிறிஸ்துவை குறித்து இளம்பெண்ணுக்கு அறிவித்துள்ளார். இளம்பெண் இயேசு கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு மதம் மாறியுள்ளார். இதனை அறிந்த அவரது தந்தை இளம் பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த இளம் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.