கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நடந்து வரும் போராட்டங்களில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் போன்றவர்களில் பணி முன்னணியில் இருக்கிறார்கள்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நடந்து வரும் போராட்டங்களில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் போன்றவர்களில் பணி முன்னணியில் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுக்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து இந்த சேவையை செய்து வருகின்றனர். நோயாளிகள் மீண்டு வர தன்னலமின்றி உழைத்து வரும் அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
இந்நிலையில் செவிலியர்களில் ஒருவர், கொரோனா நோயாளி ஒருவர் மீது காதல் கொண்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா காதல் ஜோடிகளின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
செவிலியர் தான் காதலித்த நோயாளிக்கு தனது உயர்ந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், சிகிச்சையளித்தார், அத்துடன் அவர் முழுமையாக குணமடையும் வரை அவருடன் இருந்தார்.
பின்னர், இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தினர் மற்றும் அவர்கள் நிச்சயத்தை மருத்துவமனையிலேயே செய்து கொண்டனர். அந்த படம் பலரது இதயத்தையும் உருக செய்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து உயிர் பிழைத்த அந்த நோயாளி தான் காதலித்த செவிலியர் விரலில் ஒரு மோதிரத்தை அணிவித்தார், அப்போது செவிலியர் வெட்கப்படுவதும் போன்ற போட்டோ பலரையும் கவர்ந்துள்ளது.
உலகமே கொரோனாவல் திக்குமுக்காடி கொண்டிருக்க, செவிலியர் நோயாளி காதல் கதை பலரையும் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.