அமெரிக்காவைச் சேர்ந்த, முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்' விமான நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய, 12 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்' விமான நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய, 12 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ந்பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. மேலும் பொதுமுடக்கத்தால் விமான போக்குவரத்து துறை முடங்கியுள்ளது, மேலும் விமான தயாரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, அமெரிக்காவைச் சேர்ந்த, முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்' விமான நிறுவனம், 12 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியது,கொரோனா பாதிப்பால் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள வர்த்தக பாதிப்பை சரிசெய்ய வேண்டியிருக்கிறது. இதையடுத்து தற்போதை நிலையில் ஆட்குறைப்பு அவசியமாகிறது என்றார்.