உலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

உலக சுகாதார அமைப்புடனான உறவுகளைத் துண்டித்து கொள்ளப்போகிறோம்- ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் படவில்லை என அமெரிக்க டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகள் தெரிவித்து வருகிறார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக சுகாதார அமைப்பு சரியாக செயல் படவில்லை என அமெரிக்க டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகள் தெரிவித்து வருகிறார்.

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், எந்தவொரு நாடும் வழங்காத நிதியை உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 450 மில்லியன் டாலர் வழங்கி வருகிறது. ஆனால் நாங்கள் சரியாக நடத்தப்படவில்லை என்றும் கூறினார். மேலும் உலகசுகாதார அமைப்பு கணிசமான முன்னேற்றங்களை எடுக்கா விட்டால் நிதி முடக்கம் நிரந்தரமாகிவிடும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார், அப்போது அவர் பேசுகையில்,

கொரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராடுவதற்கு ஆரம்ப கட்டத்தில் போதுமானதைச் செய்யத் தவறிவிட்டது. நாங்கள் கோரிய மற்றும் பெரிதும் தேவைப்படும் சீர்திருத்தங்களைச் செய்யத் தவறியதால், உலக சுகாதார அமைப்புடனான எங்கள் உறவை நாங்கள் இன்று முதல் துண்டித்து கொள்ளப்போகிறோம்.

கொரோனா வைரஸ் குறித்து சீனாவிடம் இருந்து உலகிற்கு பதில்கள் தேவை. எங்களுக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com