புதிதாக பாதிப்பு இல்லை; கொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்து…

புதிதாக பாதிப்பு இல்லை; கொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்து…
புதிதாக பாதிப்பு இல்லை; கொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்து…

நியூசிலாந்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, வைரஸால் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை அங்கு கொரோனா வைரஸ், கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, வைரஸால் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை அங்கு கொரோனா வைரஸ், கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகளை கொரோனா வைரஸ் புரட்டிப்போட்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 17.93 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 4,542 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்தில், கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு, வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1,504 ஆக உள்ளது. இதில், 1,481 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகிறார். அங்கு கொரோனாவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, இங்கு வைரசால் யாரும் புதிதாக பாதிக்கப்படவில்லை.இதனால் அந்நாட்டில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com